தெற்கு லண்டனில் இருவரை நரபலி அளித்த சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவர் உட்பட 42 பேர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் தெற்கு லண்டனில் உள்ள Montego Bay என்ற பகுதியில் ஆராதனை வேளையில் இருவர் நரபலி இடப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மத போதகர் கெவின் ஒ ஸ்மித் (39) உட்பட அவரது குழுவினர் 41 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது சம்பவத்தன்று மதபோதகர் கெவின் ஒ ஸ்மித் உலகை பெருவெள்ளம் சூழ உள்ளது. எனவே என்னை நம்புவோரை மட்டும் தான் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து Tanecka Gardner (39) என்ற பெண்ணை கழுத்தை அறுத்தும், ஆண் ஒருவரை உடைகளை களைந்தும் நரபலி இட்டுள்ளனர்.
அதேசமயம் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்றதால் மட்டுமே பெரும்பாலானோரை நர பலியிலிருந்து காப்பாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தனது பேஸ்புக் பக்கத்தில் மதபோதகர் ஸ்மித் சம்பவத்திற்கு முன்பு தனது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பிறகு அந்த தேவாலயத்தில் வெள்ளை உடை அணிந்த சுமார் 50 ஊழியர்கள் ஒன்று திரண்டுள்ளனர். இதையடுத்து நரபலிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை ஆயத்தம் செய்ததாக கூறப்படுகிறது.