Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20 World Cup : வெஸ்ட் இண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து ….! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை  தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடந்த ‘சூப்பர் 12’ லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த  வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் 14.2 ஓவரிலேயே அனைத்து  விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் சுருண்டது .இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 2.2 ஓவர் வீசி ,2 ரன்  மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதன் பிறகு 56 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி விளையாடியது. இதில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 11 ரன்னில் வெளியேற ,அவரைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 9 ரன்னும், மொயின் அலி 3 ரன்னும் ,லிவிங்ஸ்டன் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜாஸ் பட்லர் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Categories

Tech |