திருவனந்தபுரத்திலிருந்து உக்ரைனில் வசிக்கும் வாலிபரை இளம்பெண் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளாவில் இதுவே முதல் முறையாகும்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா என்ற பெண்ணை திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இதனால் இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக ஜீவன் குமாரால் குறிப்பிட்ட நாளுக்குள் கேரளாவுக்கு வரமுடியவில்லை. இதனால் ஆன்லைனில் திருமணம் செய்து கொள்ள அனுமதி வேண்டி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் வெளியுறவுத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை இடம் கருத்து கேட்டு ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. அதன்படி மணமகள் தனியா கேரளாவிலும், உக்ரைனில் ஜீவன்குமார் ஆன்லைனில் தயாராக இருந்தார். சார்பதிவாளர் டிஎம் பிரோஸ் முன்னிலையில் ஆன்லைன் மூலமாக இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் சார்பில் தந்தை தேவராஜன் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு சிறிது நேரத்தில் சிறிது நேரத்தில் மணமகள் தன்யாவுக்கு திருமண சான்றிதழை சார்பதிவாளர் வழங்கினார். ஆன்லைனில் திருமணம் நடப்பது கேரளாவில் இதுவே முதல் முறையாகும்.