இரண்டு இளைஞர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்து போலீசார் நாணயங்களை கைப்பற்றியுள்ளனர்.
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உம் அல் பஹ்ம் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள வனப்பகுதியின் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது அங்கிருந்து மண்வெட்டி மற்றும் மெட்டல் டிடெக்டருடன் இரண்டு இளைஞர்கள் வெளியே வருவதை கண்டுள்ளனர். மேலும் அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். குறிப்பாக அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் வழிமறித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்து இரண்டு நாணயங்களை கைப்பற்றி தொல்பொருள் ஆணையத்திடம் சேர்த்துள்ளனர்.
அந்த நாணயங்களை சோதனை செய்து பார்த்ததில் அதில் ஒன்று சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்த நாணயத்தின் ஒரு புறம் கிரேக்கக் கடவுளான ஜீயசின் உருவமும் மறுபுறம் மின்னல் வெட்டும் பொழுது கழுகுகள் இறக்கைகளை மூடி நிற்பது போன்றும் இருந்துள்ளது. குறிப்பாக அதில் டோலமிக் வம்சத்தைச் சார்ந்த எகிப்து மன்னனின் பெயர் கிரேக்க மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாணயத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.