என்ஜினீயரின் இருசக்கர வாகனத்தை திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அருகே சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயர் இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி உடனடியாக மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த முகமது ரியாஸ், பிரவீன் ராஜ், கரூரை சேர்ந்த நவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் 2 நாட்கள் முன்பு காணாமல் போன சக்கரவர்த்தியின் இருசக்கர வாகனம் என்பதும், இதனை இவர்கள் 3 பேரும் திருடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கைது செய்து அவர்கள் திருடிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.