சோமாலியாவில் இரு அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தேசிய ராணுவ படையின் ஆதரவு பெற்ற கால்முடக் மாநில படை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்முடக் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட 20 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலின் போது 40-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் உட்பட பலரும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பியோடினர். பின்னர் மக்கள் அனைவரும் பத்திரமாக வேறு இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். மேலும் இவர்களில் 1,005 சிறுவர்கள் உட்பட 2,009 மாற்று திறனாளிகளும் அடங்குவர். தற்போது இந்த சம்பவம் குறித்த விபரங்களை அந்நாட்டின் தகவல்துறை மந்திரியான அகமது ஷிரே அவர்கள் வெளியிட்டுள்ளார்.