இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று வருகின்றனர். எனவே அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கிய வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. அதனால் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது.
அதனால் பள்ளிகள் திறப்பை மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதனால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நலன் கருதி நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.