ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பிரேம் குமார் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.