நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலையை ஏற்றுவதற்கு மத்திய அரசின் பேராசையே காரணம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வரி விதிப்பு என்பது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டுமே தவிர ஒரே பொருளின் மீது 33 சதவீத வரியை விதிப்பது தவறானது என்று கூறியுள்ளார். தனிமனித சேமிப்பு குறைந்திருப்பது நாட்டுக்கே ஒரு எச்சரிக்கை மணி என்றும் அவர் கூறியுள்ளார்.