நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாகக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நிலையில், ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆரியன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஆர்யன் கானை அவருடைய தந்தை நடிகர் ஷாருக்கான் சிறையில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க பாஜக சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் அவர்களுடைய இலக்கு நடிகர் ஷாருக்கான் தான் இந்த சோதனை நடந்து வருவதாகவும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்த நிலையில் மற்றொரு மகாராஷ்டிர அமைச்சர் சஹாஜன் புஜபால் கூறுகையில், இந்த வழக்கு வேண்டுமென்றே புனையப்பட்டது போல் தெரிகிறது. ஒருவேளை ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் இந்த போதைப்பொருள் சர்க்கரையாக மாறிவிடும் என்று கூறி கிண்டலடித்துள்ளார்.