தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டடத்தின் உறுதித்தன்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகளில் போதிய இருக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கல்வி கட்டணம் தொடர்பான பட்டியல் தகவல் பலகை வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.