3 மாத குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பாட்டியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட வடிவமைப்பாளரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி என்பவர் மதுரையில் இருந்து சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா வெளியே சென்ற சமயத்தில் சாந்தி தனது பேரக் குழந்தைகளை தாக்கியுள்ளார். இதனால் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் பெண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சாந்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் கூறும் போது, சாந்தி அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சாந்தி மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. எனவே சாந்தியை கைது செய்தால்தான் முழு விவரம் வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.