Categories
அரசியல் மாநில செய்திகள்

ஷ்ஷப்பா…! ஒண்ணா… ரெண்டா…. கணக்கே இல்லாம போகுதே…. ஓ.எஸ் மணியன் குமுறல்…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து, முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.எஸ் மணியன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது ஒண்ணா, ரெண்டா, மூணா தொடர்ந்து சோதனை பண்ணி கொண்டே தான் இருக்கிறார்கள்.

இது அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் கிடையாது. தொடர்ந்து பேசிய அவர், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபோது அதிமுக கொடி கட்டிய காரில் தான் வந்தார். பின்னர் அந்த கொடியை பாதியிலேயே காவல்துறையினர் அகற்றினர். கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சசிகலா அதிமுக கொடி வைத்த காரில் பயணம் செய்தார். எம்ஜிஆர் நினைவிடத்தில் அவர் திறந்து வைத்த கல்வெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று பொறிக்கப்பட்டதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |