Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா எச்சரிக்கை…! ”அமைதியை குலைக்காதீங்க” கடும் நடவடிக்கை எடுக்கப்படும்….!!

காஷ்மீரின் அமைதியைக் கெடுக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டு கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார்.

முதல் நாளில் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை உயரதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது காஷ்மீரில் தொடர்ந்து வரும் என்கவுண்டர்கள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை கேட்டு அறிந்தார். இதையடுத்து தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார்.  பின்னர் ஸ்ரீநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா காஷ்மீரின் அமைதியைக் கெடுக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர்  இளைஞர்களுடன் நட்பாக இருக்கவே தாம் விரும்புவதாக கூறினார். காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துவிட்டதாக குறிப்பிட்ட அமித்ஷா ராணுவத்தினர் மீதான கல்வீச்சு சம்பவங்கள் காணாமல் போயுள்ளதாக கூறினார்.  ஊரடங்கு உத்தரவு, இணைய சேவைகள் இடைநிறுத்தம் குறித்து மக்கள் அதிக அளவில் கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்ட அமித்ஷா, ஊரடங்கு உத்தரவு இல்லாதிருந்தால் ஏராளமான உயிர்கள் பலியாகி இருக்கும் என்றார். பின்னர் ஸ்ரீ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீநகர்-ஷார்ஷா  இடையேயான சர்வதேச விமான போக்குவரத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

Categories

Tech |