Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கொடூர கொலை…. கடலில் வீசபட்ட சடலம்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

நியூயார்க்கில் முன்னாள் மருத்துவர் மனைவியை கொன்று கடலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கில் வசிக்கும் Robert Bierenbaum என்பவர் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றினார். இவரது மனைவியின் பெயர் Gail Katz ஆகும். மேலும் Robert மற்றும் Gail இடையே திருமண வாழ்க்கை ஒத்துப்போகாததால், அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். இதன் பின் கடந்த 1985 ஆம் ஆண்டு, வழக்கம் போல் இருவருக்கும் நடந்த சண்டையில் கோவத்தின் உச்சத்தில் இருந்த Robert மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றார்.

பின்னர் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வாறு சுமார் 15 வருடங்கள் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து, Robert விமானத்தை வாடகைக்கு எடுத்த பதிவுகளை அதிகாரிகள் சோதித்த போது, Gail காணாமல் போன மறுநாள் அவர் விமானத்தில் சென்றது தெரிய வந்தது. இறுதியில், Robert தனது மனைவியின் உடலை அட்லாண்டிக் கடலில் அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்க, அதை நிரூபிக்க சாட்சி கிடைக்கவில்லை. இந்த சூழலில், Gail காணாமல் போன 4 ஆண்டுகளுக்கு பின் ஸ்டேட்டன் தீவில் உடற்பகுதி ஒன்று கரை ஒதுங்கியது.

இதனை டிஎன்ஏ சோதனை செய்த, ஆய்வாளர்கள் Gail-இன் உடற்பகுதி என்று உறுதி செய்ததால், கடந்த 2000 ஆம் ஆண்டு Robert சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த Robert, சமீபத்தில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அதில் அவர், தனது மனைவியை கழுத்தை நெறித்து கொன்று தனது சொந்த விமானத்தில் எடுத்து சென்று அட்லாண்டிக் கடலில் வீசியதை ஒப்புக்கொண்டார். மேலும் தனது கோபத்தை கட்டுப்படுத்த இயலாமல் இது நடைபெற்றதாகவும் தெரிவித்தார். தற்போது அவரின் பரோல் நிராகரிக்கப்பட்டது. மேலும் வரும் நவம்பர் மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்றும் தகவல் வெளியாகியது.

Categories

Tech |