நெதர்லாந்தில் மஞ்சள் நிற வாழைப்பழம் போல் காட்சி அளிக்கும் அரியவகை மீன் பிடிபட்டது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் கிளாட்ஸ் என்பவர் தனது சகோதரருடன் மீன்பிடித்து கொண்டிருந்தார். அந்த சமயம் ஏரியில் இருந்து அரிய வகையிலான மீன் ஒன்றை இருவரும் பிடித்தனர். இது கேட்ஃபிஷ் வகையை சேர்ந்த மீன் ஆகும். மேலும் இந்த மீன் வாழைப்பழம் போன்ற தோற்றத்தில், முழு மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த நிலையில் பிடிபட்ட மீன் வித்தியாசமாக தோற்றம் அளித்தால், கிளாட்ஸ் சில புகைப்படங்களை மட்டும் எடுத்து கொண்டு மீண்டும் அதே எரியிலேயே விட்டுள்ளார். இந்த பகுதியில் வேல்ஸ் கேட்பிஷ் எனப்படும் அரியவகை மீன் வகைகள் அதிகளவில் பிடிபடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஐரோப்பாவில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளில் சிலுருஸ் கிளானிஸ் என்ற கேட்பிஷ்கள் மிகுதியாக காணப்படுகின்றன.
அதுமட்டுமின்றி இந்த வகை மீன்கள் சுமார் 9 அடி நீளம் மற்றும் 130 கிலோ எடையில் 50 வருடங்கள் வரை உயிர்வாழ கூடியவை. மேலும் அடர் பச்சை அல்லது கருப்பு நிறத்திலேயே காணப்படும். ஆனால் தற்போது பிடிபட்ட மீன் முழு மஞ்சளாக இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. எனவே, இந்த மீன் மேலும் வளர கூடிய வாய்ப்புள்ளதால் மீனை நீரில் விட்டதாக கிளாட்ஸ் கூறினார். தற்போது இந்த மீன் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.