புழு இருந்த பப்ஸ் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுடன் அப்பகுதியில் இருக்கும் பேக்கரிக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது மகன் சாப்பிடுவதற்காக ராஜா ஒரு பப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் ஊழியர் கொண்டு வந்து கொடுத்த பப்ஸில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா பேக்கரி உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு கடை உரிமையாளர் பப்ஸில் எறும்பு தான் உள்ளது என ஏளனமாக பதில் கூறியுள்ளார். இது குறித்து அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தரமற்ற முறையில் தின்பண்டங்களை விற்பனை செய்த பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.