கர்நாடக அரசு பேருந்தில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து மைசூரு நோக்கி கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து மாக்கமூலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மூங்கில் காட்டில் இருந்து வேகமாக ஓடிவந்த புள்ளிமான் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயற்சித்த போதும், புள்ளிமான் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு காட்டுப்பகுதியில் புள்ளிமானின் உடல் புதைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.