இந்தியாவில் தங்கத்தின் விலையை விட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா அல்லது உயராதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், டீசல் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளதால் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் தினம் தோறும் 1.15 கோடி பேர் பயணம் செய்கின்றனர். டீசலுக்கான மானியத்தை அரசு வழங்கினாலும் கூட தொடர்ந்து டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால் போக்குவரத்துத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை.இருந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.
தினந்தோறும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இலவச பயண திட்டத்தின் கீழ் சராசரியாக சென்னையில் பயணம் செய்கின்றனர். அதுவும் வேலை நாட்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.