Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி மாயவன் கோவில் வீதியில் உதயகுமார்- பிருந்தா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் உதயகுமார் எலக்ட்ரீசியனாக இருந்தார். இந்நிலையில் உதயகுமார் குதிரைபாளியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் மின்மோட்டார் பொருத்தும் வேலைக்கு சென்றார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் உதயகுமார் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு அறையில் மின் மோட்டார் அருகே வயரை பிடித்தபடி உதயகுமாருக்கு மின்சாரம் தாக்கி இருந்தது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உதயகுமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உதயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |