Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

”எங்களை விடுவியுங்கள்” 20 பேர் தற்கொலை முயற்சி… திருச்சி சிறையில் பரபரப்பு …!!

விடுதலை செய்ய கோரி 20 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது திருச்சி மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கூடிய அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள , குறிப்பாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்றவர்கள் , போலி பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தியவர்கள் ,  அனுமதி இல்லாமல் இந்தியாவில் வாழ்தந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கை , வங்கதேசம் , சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

70_க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் நிலுவையில் இருந்த தங்களுடைய வழக்குகள் முடிந்து விட்டது , தங்களுக்கான தண்டனை காலம் நிறைவடைந்து விட்டது எனவே தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவார்கள். மேலும் அவர்கள் விடுவியுங்கள் என்று மரங்களில் ஏறி நின்று தற்கொலைக்கு கூட முயற்சி செய்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளனர். இதற்கிடையே ஒவ்வொருவராக விடுவிக்க கூடிய பணிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

Image result for தற்கொலை முயற்சி முயற்சி

இந்த சூழ்நிலையில் நேற்று 70 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  வழக்கு முடிந்தும் தங்களை சட்டவிரோதமாக அடைத்து வைக்கக்கூடாது , எங்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மீண்டும் போராட்டம் நடத்தினார். இதில் இலங்கைத் தமிழர்கள் தாங்கள் விரும்பக்கூடிய நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமே தவிர எங்களைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்பதையும் கோரிக்கையாக வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 20 பேர் இன்று காலை தற்கொலைக்கு முயற்சித்து விஷம் அருந்தி உள்ளனர். இது சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயக்க நிலையில் இருக்கும் அவர்களை திருச்சி அரசு பொதுமருத்துவமைக்கு அழைத்து செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர்கள் எத்தகைய விஷத்தை அருந்தினார்கள் , விஷம் உள்ளே கொண்டு செல்லப்பட்டது எப்படி ? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |