பிரிட்டனின் பயண கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திய மக்கள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து PCR சோதனைக்குப் பதிலாக, குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
Lateral Flow Test என்ற அந்த பரிசோதனையை, பிரிட்டனிற்கு வரும் நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GOV.UK என்ற இணையதளத்தில் இந்த Lateral Flow Test என்ற சோதனைகளை, தற்போது, 22 பவுண்டுகளுக்கு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.