டாஸ்மாக் ஊழியரிடம் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தம்பாடி ஜீவா செட் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கிரே நகர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் வேலை முடிந்தவுடன் மதுபான கடையை பூட்டி விட்டு வசூலான பணத்தோடு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பெரிய வீரசங்கிலி அருகில் ஒரு கோழிப் பண்ணை வழியாக செல்வராஜ் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்வராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணத்தை கேட்டுள்ளனர் .
இதனால் அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்வராஜை கத்தியால் முதுகில் குத்த முயற்சி செய்தனர். அப்போது செல்வராஜின் முதுகில் சிறு காயம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரும் செல்வராஜ் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள் மற்றும் 6 ஏ.டி.எம் கார்டுகளை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.