வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முரளிராஜா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் முரளிராஜா கிருஷ்ணன் பணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு கடைதெருவிற்கு சென்றார்.
அதன்பின் முரளிராஜா கிருஷ்ணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த முரளிராஜா கிருஷ்ணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.