Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க முன்னாடியே சொன்னோம்…. இப்ப அது நடந்துருச்சி…. கிழித்தெறிந்த ஓபிஎஸ்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை வந்து விமானம் மூலம் புறப்பட திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலுக்கு அதிமுக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பது குறித்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என நாங்கள் முன்பே கூறியிருந்தோம் அது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார்.

பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெறும் ரெய்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் ஏற்கனவே கூறியது போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்  நடந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டுத் தன்னுடைய விமானத்தைப் பிடிக்க பிடிக்க புறப்பட்டு சென்றார்.

Categories

Tech |