தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆரம்ப பள்ளிகள் திறப்புக்கான நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தீபாவளிக்குப் பின்னர் வரலாம். மாணவர்கள் காலையில் எழுந்து உணவருந்துவது,பள்ளிக்கு வருவது போன்ற ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்பதற்காகதான் பள்ளிகளில் தற்போது திறக்கப்படுகின்றது.
தமிழகத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 45 ஆயிரம் பள்ளிகள் உள்ளது. இதில் இந்த வருடம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளில் இட பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.