Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள்” இந்த பகுதிகளில்…. வருகின்ற 26-ம் தேதி மின்தடை….!!

வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின்நிலையங்களில் 26-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகின்ற 26-ம் தேதி பராமரிப்பு பணிகளானது நடைபெற இருக்கின்றது. இதனால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கோவில் வெண்ணி, முன்னாவல்கோட்டை, காளாச்சேரி, மேலபூவனூர், நத்தம், ஆசனூர், செட்டிசத்திரம், சிக்கபட்டு, அம்மாபேட்டை, கருப்பமுதலியார் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், பெருமாநல்லூர், அவளிவநல்லூர், வடுவூர் பிரிவிற்கு உட்பட்ட மூவர்கோட்டை, எடமேலையூர், சாத்தனூர், நெய்வாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகின்ற 26-ஆம் தேதி மின் வியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலினை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |