சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பனையங்குறிச்சி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாற்றப்பட்ட கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.