Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : விராட் கோலி நிதான ஆட்டம் …. 10 ஓவரில் இந்தியா 60/3…!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக ராகுல், ரோஹித் களமிறங்க ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். ரோஹித் சர்மா எதிர்கொண்ட முதல் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.  அணியின் ஸ்கோர் 1 ரன்னுக்கு 1 விக்கெட் விழுந்த நிலையில் கேப்டன் கோலி களமிறங்கினார்.அணியின் ஸ்கோர் 2.1 ஓவரில் 6 ரன்கள் இருக்கும் போது ஷாஹீன் அப்ரிடியின் அசுர பந்து வீச்சில்  கே.எல் ராகுல் 3 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ,விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், சூர்யகுமார் 11 ரன்னில் ஏறினார். இதனால் இந்திய அணி மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக களமிறங்கியுள்ள ரிஷப் பண்ட், கேப்டன் விராட் கோலியுடன் இணைந்துள்ளார்.இதனால் இந்திய அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் குவித்துள்ளது.

Categories

Tech |