Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. குளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவில் குளத்தில் வைத்து நடைபெற்று இருக்கிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதன் காரணத்தினால் கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் முன்னிலையில் மிதவை பலூன்கள், கருவிகள் தற்காலிக மிதவை படகு, உயிர்காக்கும் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என கோவில் குளத்தில் வைத்து செயல் விளக்கம் அளித்துள்ளனர்.

இத்தகைய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியின் போது மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து  விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இருக்கின்றனர்.

Categories

Tech |