எனக்கும் , திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை மதம் , ஜாதிக்குள் அடக்க முடியாது என்று தெரிவித்த ரஜினி எனக்கு காவி வண்ணம் பூச பார்க்கிறார்கள் , அதில் நான் சிக்க மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்தார். இதற்க்கு பல்வேறு கட்சியினர் வரவேற்றப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு ஆக பார்க்கிறேன். ரஜினி ஒரு ஆன்மீகவாதி , மதவாதி அல்ல.
எந்த காலத்திலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்கள் அப்படியே வந்தாலும் நிச்சயமாக பாரதிய ஜனதாவை ஆதரிக்க மாட்டார் என்று பலமுறை சொல்லியுள்ளேன். அதை நிரூபிக்கும் வகையில் இப்போதும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். எப்படி திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி வருகிறார்களோ அதே போல் எனக்கும் காவி சாயம் பூசுகிறார்கள். திருவள்ளுவரும் நானும் சிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த ஆண்டின் மிகச்சிறந்த பேட்டி இது தான்.
இரண்டே வார்த்தைகளில் தன் முழு கொள்கையும் , அற்புதமாக அவர் குறிப்பிட்டு தமிழக மக்களின் கருத்தை அவர் பிரதிபலித்திருக்கிறார் எனவே அவரை நான் பாராட்டுகிறேன் , வாழ்த்துகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.