Categories
அரசியல் மாநில செய்திகள்

1 தொகுதியில் அரசியல் செய்யுற நீங்க…. சீண்டி பாக்க நினைக்காதீங்க…. பொங்கிய அண்ணாமலை…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே வார்த்தைபோர் மூண்டு வருகிறது. மின்சாரத்துறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆதாரத்தை காட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். ஆனால் அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். மேலும் அதெல்லாம் அதிமுக ஆட்சியில் நடந்தது என்று செந்தில்பாலாஜி அண்ணாமலை வாயை அடைத்தார்.  அது பொய் குற்றச்சாட்டு என்பதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கூறினார்.

ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று அண்ணாமலை கூறினார். இதற்கிடையில் அண்ணாமலைக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, ஒரே ஒரு தொகுதியில் அரசியல் செய்யும் சேகர்பாபு செந்தில் பாலாஜி இவர்கள் எல்லாம் பாஜகவை சீண்டி பார்க்கலாம் என்று நினைக்கவே கூடாது. பாஜக 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. 11 கோடி தொண்டர்கள் உள்ளனர். பாஜகவை தொட்டால் அவர்களுக்கு வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |