Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தீபாவளி சூப்பர் ஆஃபர்…. பைக் வாங்கினால் ரூ.4000 கிடைக்கும்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

பண்டிகை காலம் என்பதால் ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த சலுகையின் மூலமாக குறைந்த விலைக்கு பைக் மற்றும் கார் போன்ற வாகனங்களை நாம் வாங்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஈசி ஈஎம் ஐ, கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு பண்டிகை சீசனை முன்னிட்டு சிறப்பு சலுகை ஒன்றை யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி யமஹா நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் யமஹா ஸ்கூட்டர் களை வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு 4000 ரூபாய் வரை கிடைக்கும். யமஹா நிறுவனத்தின் அனைத்து பைக்குகளுக்கும் இது பொருந்தாது. 125 சிசி வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த சலுகை அக்டோபர் மாதம் இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகமான Fascino hybrid மற்றும் ray zr 125 hybrid வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் விலை 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை மட்டுமே.

Categories

Tech |