ஆணு ஆயதங்கள் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தென் கொரியா கேட்டுக்கொண்டுள்ளது.
வட கொரியா அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தென் கொரியா அமெரிக்க தூதரான சங் கிம் கூறியதில் “எங்கள் நாடு முழுவதும் அணு ஆயுதம் இன்றி இருப்பதே முதன்மையான குறிக்கோள் ஆகும்.
ஆனால் கடந்த 6 வாரங்களாக வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையினால் நாட்டின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக அமெரிக்காவுடன் வட கொரியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக வட கொரியா எப்பொழுதும் அதன் ராணுவ வலிமையை அதிகரிக்கவே முயற்சி செய்து வருகிறது.
ஆனால் போரை விரும்பவில்லை. அவர்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அதிலும் அவர்களின் ராணுவமானது மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட வித்தியாசமாக உள்ளது என்று அண்மையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னே தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் ஏவுகணை சோதனை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனதாக உள்ளது என்று வட கொரியா குற்றம் சாட்டியது.
குறிப்பாக இதன் காரணமாக வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு பலமுறை எச்சரிக்கை அளித்துள்ளது. மேலும் ஏவுகணை சோதனை காரணமாகவே அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் மோதல் நீடித்தது. இதனால் அமெரிக்கா வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.