தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 874 வீட்டுமனைகள் அடங்கிய புதிய ஏழு திட்டங்களை செயல்படுத்த வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியம் சார்பாக வீட்டு மனைகள் மற்றும்அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலமாக வில்லங்கம் இல்லாமல் நியாயமான விலையில் வீடு மற்றும் மனைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவற்றை வாங்க மக்கள் போட்டியிடுகின்றன.
ஆனால் சில வருடங்களாக வாரியத்தின் செயல்பாடுகள் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சுயநிதி முறையில் வீடு கட்டும் திட்டத்தின் தோல்வி வாரியத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை குறைத்து விட்டது. அதனால் மக்களை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வாரிய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து புதிய வீட்டுமனைகள் உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரி கூறுகையில், சென்னை அம்பத்தூரில் 151, ஆவடியில் 45, சோழிங்கநல்லூரில் 117, சேலம் மாவட்டம் ஆத்தூரில் 82, ஓசூரில் 54, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 306, மதுரையில் 119 என மொத்தம் 264 வீட்டுமனைகள் அடங்கிய ஏழு திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இன்னும் சில மாதங்களில் இந்த திட்டம் மனை விற்பனைக்காக அறிவிப்பு படிப்படியாக வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.