Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு இல்லை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படுகின்றன. அதற்கான அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட அது எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளில் செயல்படும் கேஜி வகுப்புகள் மட்டும் திறக்கப்படாது என்றும் மற்ற வகுப்புகள் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி கூறுகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, 8 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடக்கும். அதேசமயம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் நர்சரி வகுப்புகளுக்கான பிரிகேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி தவிர ஒன்றாம் வகுப்பிலிருந்து மற்ற வகுப்புக்களை நடத்திக் கொள்ளலாம். ப்ளே ஸ்கூல் என செயல்படும் மழலையர்பள்ளிகளை திறக்கவும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |