Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருந்தாலும் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் 1.5 லட்சம் பேர் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |