Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பஸ்சில் பயணம் செய்தபோது…. அதிர்ச்சியடைந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் சுகேந்திரன்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் லட்சுமி காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரி அரசு பேருந்தில் சென்றார். அப்போது பேருந்து பெரியாம்பட்டி அருகே சென்றபோது லட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |