Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் 43 மருந்துகள் தரமற்றவை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

காய்ச்சல், தொண்டை அலர்ஜி மற்றும் அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான 43 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மருந்து மற்றும் மாத்திரைகளை மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன.அந்த ஆய்வில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1,227 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 1,184 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டது. அதேசமயம் காய்ச்சல், தொண்டை அலர்ஜி மற்றும் அஜீரண கோளாறு பிரச்சனைகளுக்கான 43 மருந்துகள் தரமற்றவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் இமாச்சலப் பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்த விவரங்களை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |