நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. ஆனால் ஒருசில அதாவது ரேஷன் கடை, காவல்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற அரசு துறைகள் மட்டும் இயங்கி வந்தன. இவை மூன்றுமே மக்களுக்கு மிக முக்கியம் என்பதால் ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து பணியில் இருந்து வந்தனர். அப்போது இயக்கத்தில் இருந்த அனைத்து துறையை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தது.
அதனால் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தார்கள் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணையின்படி விடுப்புகள் கேட்பவர்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு வாயிலாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை விளக்கம் கேட்டு மனு அனுப்பப்பட்டது.
அதற்கு அரசு ஊழியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சரின் தனிப்பிரிவு விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த அரசாணை முழுக்க முழுக்க மக்களின் நலன் கருதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தமிழக அரசின் இந்த சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை அரசு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.