திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் காவேரிப்பட்டி பகுதியில் பரணி செல்வன் என்ற இளைஞர் வசித்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பரணி செல்வன் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியை காணததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும், இதில் பரணி செல்வன் மீது சந்தேகம் இருபதாகவும் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே சிறுமி தனியாக நின்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சிறுமியை மீட்ட காவல்துறையினர் காவேரிப்பட்டி அருகே பதுங்கியிருந்த பரணி செல்வனை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.