அனிதா சம்பத் சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் வாசிக்கும் செய்திகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது சோனியா அகர்வாலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, தான் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CVZdjTLhJWi/