டி 20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன .
7-வது டி 20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . இதில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகமது நபி மற்றும் முஜீப் ஜட்ரன் ஆகியோர் தங்கள் பந்துவீச்சின் மூலம் எதிரணியினருக்கு நெருக்கடி அளிக்க கூடியவர்களாக உள்ளனர். அதேபோல் பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் ஹஜரத்துல்லா ஜஜாய், முகமது ஷஜாத் ஆகிய இருவர் மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர்.இதனால் ஆப்கானிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடினார்அவர்கள் எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.
அதேசமயம் ஸ்காட்லாந்து அணி பப்புவா நியூ கினியா, ஓமன் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளில் தொடர்ச்சியாக வீழ்த்தி ‘சூப்பர் 12’ சுற்றுக்கு நுழைந்துள்ளது. அதேசமயம் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சம பலத்துடன் காணப்படுகிறது இதுவரை சர்வதேச டி20 போட்டியில் இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன .இதில் 6 முறையும் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது .இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் முனைப்புடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு சர்ஜாவில் தொடங்குகிறது.