ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
உத்திரபிரதேசம் கித்தோர் சட்டப்பேரவை தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் பேரணியானது நடைபெற்றது. இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டு பேசியதாவது, “இந்தியாவில் 100 கோடி மக்கள் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார்.
ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 31 சதவீதம் மக்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியுள்ளனர்.. உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள்தான் தலித்துக்களுக்கு அடுத்தபடியாக அதிகமான அநியாங்களை சந்திக்கின்றனர். நம் நாட்டில் கடந்த 23ஆம் தேதி 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்ற முக்கிய இலக்கினை எட்டியுள்ளது. தற்பொழுது பல்வேறு கட்சித் தலைவர்கள் முன்பு போன்று இப்பொழுதும் வந்து வாக்கு கேட்பார்கள்.
அரசியல் தலைவர்கள் உங்கள் அனுதாபிகளாக மாறுவார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். தடுப்பூசி விஷயத்தில், மத்திய அரசு முதலில் மாநிலத்தையும், மக்களையும் தங்கள் தலைவிதியாக விட்டு விட்டது. ஆனால் மத்திய அரசானது கோவிட் தடுப்பூசி கொள்கையினை, உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் மாற்றியுள்ளது” என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசினை இவர் குற்றம் சாட்டியுள்ளார்.