தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவள்ளூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும். தெற்கு வங்ககடல் மத்திய பகுதியில் வருகின்ற இருவத்தி ஏழாம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும். அதனால் மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.