நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய கிரக சூழ்நிலையின் படி பயணங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உறவினர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். வரவை விட கொஞ்சம் செலவு தான் கூடும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று வீண் அலைச்சல் வேலைப்பளு போன்றவை இருக்கும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் அடுத்தவர்களைப் பற்றிய விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள், கிண்டல் போன்றவற்றை தவிர்த்து விட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது.
அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிரிகள் இன்று விலகிச்செல்வார்கள். அலைச்சலுடன் கூடிய ஆதாயம் இன்று இருக்கும்.அதுபோலவே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதாக இருக்கும். அந்த பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புதிய முயற்சிகளில் ஓரளவு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.
இன்று சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். எப்பொழுதும் போலவே மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு வையுங்கள். கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று செல்வாக்கு உங்களுக்கு உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல நீங்கள் தொழிலுக்காக எடுக்க கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப நல்ல படியாக இருக்கும். பழைய சிக்கல்கள் அனைத்தும் தீரும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் தாமாகவே விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையும் நல்லபடியாக இருக்கும். வீண் செலவு குறையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்துசேரும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் இருந்த சாதகமான பலன்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர் களின் வேலைப் பளு அதிகரிக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். உழைப்பு கடுமையாக இருந்தாலும் லாபத்துக்கு எந்தவித குறையும் இருக்காது. அதுபோல உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.இன்று இல்லத்தில் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும். பெண்களுக்கு மன குழப்பம் தீரும் நாளாக இருக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பு கிடைக்கும். அது போலவே இன்று அதிர்ஷ்டமான வாய்ப்புகளையும் நீங்கள் பெறக்கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை நடத்தினால் இன்று சிறப்பை கொடுக்கும்.
இன்றைய நாள் வெளிவட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படும் நாளாக இருக்கும்.போது அதுபோலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமிட்டு வாருங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு மனிதனுக்கு கர்ம தோஷம் மட்டும் பின்தொடரும் ஆயின் அது நல்லதாக இருந்தால் நல்லது நடக்கும். தீமையாக இருந்தால் நமக்கு தீமை நடக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெருமைகள் வந்து சேர இறைவன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாகயிருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினைகள் உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அடுத்தவர் யாரும் குறை கூற கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும்.
இன்று அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். அதுபோல உத்தியோகத்தில் வேலை செய்யக்கூடிய சக நண்பர்களால் உங்களுக்கு அனைத்து விஷயமும் நல்லபடியாக நடக்கும். இன்று உறவினர் வகையிலும் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். அதே போல கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்த வரையில் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். ஆனால் சரியான நேரத்துக்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எப்பொழுதுமே கவனம் இருக்கட்டும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை கலர் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் காலையில் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வையுங்கள். மிகவும் விசேஷமாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்தும் இறைவனை பூஜித்தும் செயல்படும் நாளாக இருக்கும். விரயங்கள் கூடும். அதிகாலையிலேயே பிரச்சனைகள் கொஞ்சம் உருவாகக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வேலையாட்களிடம் போராடி வேலைகளை வாங்கும் சூழ்நிலை உருவாகும். இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். மாணவர்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. இன்று நட்பு வட்டம் விரிவடையும். இருந்தாலும் நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் எழக்கூடும். உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். மனதில் இனம்புரியாத கவலை வந்து செல்லும். ஆன்மீகத்தில் கவனத்தைச் செலுத்தினால் இன்று மனம் உங்களுக்கு நிம்மதியாகவே இருக்கும்.அதுபோலவே குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். சகோதர வகையில் நன்மை ஏற்படும். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பார்த்துக்கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிக்கும் படியான சூழல் இருக்கும்.
அதுபோல தனவரவு இன்று ஓரளவு கால தாமதத்துடன் தான் கிடைக்கும். அதற்கு ஏற்றால் போல் திட்டங்களை தீட்டி கொள்வது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை இன்று வைப்பது மிகவும் சிறப்பு. இந்த அன்னம் உங்கள் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றும். கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் பணி செய்வீர்கள். சிக்கல்கள் விலகி ஓரளவு சிறப்பை கொடுக்கும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை இருக்கும். இன்று சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு உறங்கச் செல்வது மிகவும் சிறப்பு. பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு நீங்கும். பொருளாதாரமும் சிறப்பாகவே இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும்.
மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை மிகவும் பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் கொஞ்சம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள் அது போதும். வீண் பிரச்னைகளும் வாக்குவாதங்களும் இருக்க வேண்டாம்.பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்து உரையாடும்போது வார்த்தைகளை கவனித்து கூர்ந்து பேசுவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் பொறுமையை மட்டும் இழந்து விடாதீர்கள் அது போதும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனமும் உங்களுக்கு நிம்மதியாக காணப்படும்.
மாணவர்கள் கல்வியில் கவனமுடன் பாடத்தை படிப்பது நன்மையை கொடுக்கும். இன்று வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நட்பு வட்டம் விரிவடையும் நாளாக இருக்கும். ஆரோக்கிய தொல்லை அகலும். வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். கொடுக்கல் வாங்கலும் நல்லபடியாக இருக்கும். பழைய பாக்கிகள் வந்துசேரும். போட்டிகள் பொறாமைகள் விலகிச்செல்லும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்று இருக்கும். கன்னி ராசிக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். எதையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.அதன் மூலம் கலைத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல புதிய வாய்ப்புகள் வந்து சேரும். எதையும் துணிச்சலாகவே நீங்கள் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இன்றைக்கு கூடும்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் இன்று முன்னேறி செல்வீர்கள் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது அதிகமான காரியத்திற்கு செல்லும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி நீங்களும் மனநிம்மதி ஆகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல மனிதர்களின் சந்திப்பு கிட்டும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர் பகை மாற புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாகவே செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியத்தில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர் என்பதால் உதவி செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாக செய்யுங்கள்.மனதில் இருந்த கவலை நீங்கி இன்றைக்கு நிம்மதியும் உண்டாகும். இன்று குடும்பத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும் . அதுமட்டுமில்லாமல் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதே போல வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். இருந்தாலும் வெளியில் செல்லும்பொழுது நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்களுக்கு கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ பாக்கியத்தை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நன்மைகள் நடைபெற இறைவனை மனதார வழிபடுங்கள். விருந்தினர் வருகை இருக்கும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். இன்று தேவையானவற்றை சில வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். அதன் மூலம் நன்மை கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைத்து மனம் மகிழும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆர்வமும் அதிகரிக்கும். விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் செல்லும். உங்கள் திறமையும் வெளிப்படும்.
இன்று தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.வெளியூர் பயணத்தை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டு முயற்சியில் தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றமான பலன் இருக்கும்.
பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இன்று படு ஜோராக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த உணவை காக்கைக்கு அன்னதானமாக வழங்குங்கள். அனைத்தும் நன்மையை கொடுக்கும். செல்வ பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று யோகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதே போல எளிதாக நிறைவேறும். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தொழில் கூட்டாளிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் சிந்தனை தோன்றும். இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்றாகவே இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி மட்டும் உணவு உண்ண வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
உடல்நிலையில் மட்டும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு வீண் செலவுகள் குறையும். பயணங்கள் செல்ல நேரிடும். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியமும் சாதகமாகவே நடந்து முடியும்.வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். பழைய சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பப் பிரச்சினைகளில் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இன்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அந்த பயணம் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். உங்கள் திறமையை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.
அதுபோலவே மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தயவுசெய்து ஆசியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் எந்தவிதமான பிரச்சினைகளும் வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு உணவாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றி ஏற்பட இறைவனை மனதார நினைத்து வணங்குங்கள். உடன் பிறப்புகளால் உற்சாகம் ஏற்படும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசியவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். இன்று கை, கால் வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கௌரவம் பாதிக்கும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரக்கூடும். உங்கள் பேச்சில் மட்டும் இன்று நிதானம் இருந்தால் அந்த பிரச்சினைகளிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
தொழில் வியாபாரத்தில் நண்பர் உடன் அனுசரித்து செல்லுங்கள். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் இன்று கிடைக்கும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அந்த இறைவன் கொடுப்பார்.ரொம்ப நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்த நோய் உங்களுக்கு இன்று சரியாகும். கை கால் அசதி மட்டும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மகர ராசிக்காரர்கள் எப்போதுமே மனதைநீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள். அதனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை சாமர்த்தியமாகவும் நீங்கள் சரிசெய்வீர்கள். வரக்கூடிய உபரி வருவாயால் கடன்கள் அனைத்துமே அடைபடும்.
இன்று கடன்கள் அடைபட்டு மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நிலை பாடற்ற பிரச்சினைகளிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வீர்கள். அது மட்டும் இல்லை இன்று பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். வீண் வாக்குவாதங்கள் யாரிடமும் செய்ய வேண்டாம். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும். தயவுசெய்து இதை செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வருமானம் திருப்தி தரக்கூடிய அளவில் இருக்கும். வாய்ப்புகள் வாயில தேடி வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். உத்யோக அனுகூலம் ஏற்படும். கல்யாண பேச்சுகள் கைகூடும். அதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரியுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். நன்மையும் உண்டாகும். அதேபோல் பணிபுரியும் இடத்தில் இயந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு ஆகியவற்றை கையாளும் பொழுது தொழிலாளர்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
இன்று உங்களை தான தர்ம காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல் மாலை நேரத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழலும் இன்று இருக்கும். அதனால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் இன்று பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் முக்கியமான பொருளை வாங்கிக் கொடுத்து மனம் மகிழ்வீர்கள்.
இன்று ஆதாயம் சிறப்பாக இருக்கும். முடிந்தால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் செய்வதால் நல்ல யோகமான சூழலும் இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென்று சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். பால்ய நண்பர்களை சந்திக்க கூடும். வருமானம் போதுமானதாக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கும். அதனால் வாக்குவாதம் போன்றவை ஏற்படக்கூடும். எப்பொழுதுமே மீன ராசிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும்.
இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது எப்பொழுதுமே நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடும். வீண் கவலை அவ்வப்போது மனதில் வந்து செல்லும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும்.எந்த ஒரு முயற்சியும் நீங்கள் தயக்கமின்றி செய்வீர்கள். நட்பு வட்டம் பெருகும். நண்பர்களால் உங்களுக்கு பணியும் சிறப்பாக நிறைவேறும்.
இன்று எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல சிறப்பை பெறமுடியும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை சொல்லுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு சாதத்தை வையுங்கள். உங்களுடை ய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்