நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் இரண்டாவது சீசன் அன்று பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சியாக வைக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ரசித்து செல்கின்றனர். இதையடுத்து பெரணி இல்லம் அருகில் 2000 பூத்தொட்டியில் கொண்டு வட்ட வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பூங்கா நுழைவு வாயிலில் இருபுறமும் மேரி கோல்ட் செடிகளில் மலர் பூத்து குலுங்கியது. ஆனால் தொடர் கனமழையின் காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கியதால் அந்த செடிகளை அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இத்தாலியன் பூங்கா அருகில் உள்ள இலை பூங்காவில் ஐரிஸ் ரக செடிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
அதில் முதல்கட்டமாக மயில் வண்ணத்துப்பூச்சி மற்றும் இதய வடிவில் போன்ற செடிகளை நடப்படுகின்றன. மேலும் பச்சை மற்றும் நீல நிறத்தில் உள்ள செடிகளை நட்டு 10,000 செடிகள் நடவு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் இத்தாலிய பூங்காவில் வளர்ந்த அலங்காரச் செடிகளை அழகாக வெட்டி ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற மூன்று வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியது, மரங்களுக்கு அடியில் மலர்ச்செடிகள் போதுமான அளவு வளராது. அதனால் இலை பூங்காவை பயன்படுத்தக்கூடிய வகையில் இலை செடிகளைக் கொண்டு அழகு படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.