Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் புதிதாக குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி மகிழ்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். 505 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனைக் கருதி முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கரும்பின் விலையை உயர்த்தியும் நிலுவைத் தொகை 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது வரை ஏழு லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அடுத்த 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாயவிலை கடைகளில் பனைவெல்லம் விற்பனையை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அடுத்ததாக தேங்காய் எண்ணெய் நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களுக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் ரேஷன் கடையில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |