சினேகனுக்கு திருமண பரிசளித்தார் முன்னணி இசையமைப்பாளர்.
கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருகிறார். இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடத்தி வைத்தார். இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து கூறினார். மேலும், அவரின் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப்பக்கத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், இசையமைப்பாளரான இளையராஜா அவர்கள் சினேகனையும் அவரது மனைவியும் நேரில் அழைத்து வாழ்த்தி சிறப்பு பரிசாக மோதிரத்தை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.