நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு 71 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை இலவசமாக வழங்குகிறது. இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பெறலாம்.
சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் 71 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற முடியும். சிட்டி பேங்க் பிளாட்டினம் டெபிட் கார்டை பயன்படுத்தி ஐபாசி பெட்ரோல் பங்கில் 150 ரூபாய்க்கு அதிகமாக பெட்ரோல் போடும்போது 4 டர்போ பாயிண்ட்களை வழங்கப்படும். இதன் மதிப்பு ஒரு ரூபாய் ஆகும். இது ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். இந்த டர்போ பாயிண்டுகளை மாற்றி அதிகபட்சம் 70 ஒரு லிட்டர் அளவிலான பெட்ரோலை வாங்க முடியும்.